எத்தனை நாட்களாக காத்திருந்தேன் உனக்காக?
எத்தனை நாட்கள் ஏங்கியிருப்பேன் உனக்காக?
தூக்கமில்லா இரவுகளையும்
துக்கமான பொழுதுகளையும்
ஏன் எனக்கு தந்தாய்?
ஏன் எனக்கு இந்த தண்டனை?
எத்தனை முறை உன்னை பார்த்தாலும்
அத்தனை அழகாய் இருப்பாய்!!
ஏன் இந்த கோபம் என் மேல்?
நான் என்ன தவறு செய்தேன்
உன்னை ஆராதித்ததை தவிர?
மழையே!!
நீயும் பெண் தானோ??